தமிழ்நாடு

வீட்டிலிரு: வீதிகளில் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு

7th Apr 2020 12:26 PM

ADVERTISEMENT

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதை புதுக்கோட்டை வீதிகளில் ஓவியர்கள் வண்ண ஓவியமாக வரைந்து வருகின்றனர்.

தமிழ்நாடு ஓவியர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டக் கிளை சார்பில் 20 ஓவியர்கள் இந்தப் பணியை செய்து வருகின்றனர்.

 புதுக்கோட்டை பிருந்தாவனம், புதிய பேருந்து நிலையத்தில் தற்போது (செவ்வாய்க்கிழமை) இப்பணி நடைபெற்று வருகிறது.

நேற்று திங்கள்கிழமை புதுக்கோட்டை அண்ணாசிலை, சந்தைப்பேட்டை ஆகிய சாலைகளில் இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

 கரோனா வைரஸ் படத்தைப் பிரதானமாக வரைந்து கீழே 'வீட்டிலிரு' எனப் பெரிதாக எழுதுவது தப்பித்தவறி வெளியே வரும் நபர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT