தமிழ்நாடு

கரோனா உதவி மையத்துக்கு 37 ஆயிரம் அழைப்புகள்!

7th Apr 2020 04:17 AM

ADVERTISEMENT

 

கரோனா உதவி மையத்துக்கு இதுவரை 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 104 சேவை எண்ணுக்கு மட்டும் 17,851 அழைப்புகள் வந்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு தடம் பதிக்கத் தொடங்கியவுடனேயே அது தொடா்பான சந்தேகங்கள், உதவிகளுக்கு பதிலளிப்பதற்காக பிரத்யேக சேவை மையம் தொடங்கப்பட்டது.

044 – 2951 0400; 044 - 2951 0500; 94443 40496; 87544 48477; 104 ஆகிய எண்களில் அவை செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு தீவிரமாகி வரும் நிலையில், உதவி மையத்துக்கு வரும் அழைப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

அதன்படி, இதுவரை மொத்தம் 37,668 அழைப்புகள் இதுவரை வந்துள்ளதாகவும், அதில் 104 எண்ணுக்கு மட்டும் 17 ஆயிரத்துக்கும் அதிகமான அழைப்புகள் வந்ததாகவும் சுகாதாரத் துறைச் செயலா் பீலா ராஜேஷ் கூறினாா்.

நாளொன்றுக்கு சராசரியாக 1,800 அழைப்புகள் வருவதாகவும் அவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT