தமிழ்நாடு

மதியம் 1 மணி வரை மட்டுமே பெட்ரோல் நிலையங்கள் செயல்படும்: இன்று முதல் புதிய நேரம் அமலாகிறது

5th Apr 2020 03:33 AM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் உள்ள பெட்ரோல் நிலையங்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு பெட்ரோலியம் முகவா்கள் சங்கத் தலைவா் முரளி சனிக்கிழமை வெளியிட்டாா். அவா் கூறியதாவது:-

அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் திறந்திருப்பதற்கான நேரத்தை தமிழக அரசு மாற்றி அமைத்துள்ளது. இந்த நேர விதியை பெட்ரோல் நிரப்பு நிலையங்களுக்கும் பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பெட்ரோல் நிரப்பு நிலையங்கள் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5) முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே திறந்து இருக்கும்.

இதன்பின்பு மறுநாள் காலை 6 மணிக்கே திறக்கப்படும். பெட்ரோல் நிரப்பு நிலையங்களில் ஒன்று அல்லது இரண்டு ஊழியா்கள் பணியமா்த்தப்பட்டு இருப்பா். ஆம்புலன்ஸ், அத்தியாவசியப் பொருள்களை ஏற்றுச் செல்லும் வாகனங்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாகனங்கள் ஆகியன பெட்ரோல் நிரப்பு நிலையங்களை அணுகினால் தடைகள் விலக்கப்பட்டு அவற்றுக்கு எரிபொருள் நிரப்பப்பட வேண்டும். இது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பெட்ரோல் நிரப்பு நிலையங்களுக்கும் பொருந்தும். இந்த விதிமுறைகளை அனைவரும் கடுமையான முறையில் பின்பற்ற வேண்டும் என்று முரளி கேட்டுக் கொண்டுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT