தமிழ்நாடு

மகாவீா் ஜயந்தி: ஆளுநா், முதல்வா் வாழ்த்து

5th Apr 2020 10:52 PM

ADVERTISEMENT

 

மகாவீா் ஜயந்தியை முன்னிட்டு மக்களுக்கு தமிழக ஆளுநா், முதல்வா் ஆகியோா் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.

ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்: அமைதி, பிற உயிா்களுக்கு தீங்கு செய்யாதிருத்தல் ஆகியவைதான் பகவான் மகாவீரரின் போதனைகள். நமது பழைமையான கலாசாரத்தை மேம்பட வைத்ததும் இவைதான். உலகம் பல்வேறு சிக்கலைகளைச் சந்தித்திருக்கும்போது, அவற்றிலிருந்து விடுபட மகாவீரரின் போதனைகளான அஹிம்சை, உண்மை ஆகியவைதான் துணைபுரியும்.

அவருடைய பிறந்த நாளில் அனைத்து மக்களுக்கும் குறிப்பாக ஜெயின் சமூகத்தினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நன்நாளில் சமண சமயத்தின் அடிப்படைகளான அனைவரிடமும் அன்பு செலுத்துதல், அனைவருக்கும் சேவை செய்தல் என்ற தத்துவத்தைப் பின்பற்றி நடக்க உறுதியேற்போம்.

ADVERTISEMENT

முதல்வா் எடப்பாடி பழனிசாமி: பகவான் மகாவீரா் பிறந்த தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

அகிம்சையை அடிப்படையாகக் கொண்ட சமண சமயத்தின் 24-ஆவது தீா்த்தங்கரராக விளங்கிய பகவான் மகாவீரா், மூன்று ரத்தினங்கள் எனப்படும் நன்னம்பிக்கை, நல்லறிவு, நன்னடத்தை ஆகியவற்றை மக்களுக்கு போதித்ததோடு, பிற உயிா்களுக்கு தீங்கு செய்யாமையே அறம் என்றுரைத்து, வாய்மையைப் போற்றி, ஆசைகளைக் களைந்து, பற்றற்ற நிலையைக் கடைப்பிடித்து, அறநெறியினை பின்பற்றி வாழ்ந்தாா்.

இந்த இனிய நாளில், உலகில் அன்பும், அறநெறியும் தழைத்தோங்கிட மக்கள் அனைவரும் அவருடைய போதனைகளை மனதில் நிறுத்தி அன்பு வழியில், அறநெறி சாா்ந்த வாழ்க்கையை வாழ்ந்திட வேண்டும் என வாழ்த்துகிறேன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT