தமிழ்நாடு

அத்தியாவசியப் பணிக்கான அனுமதிச் சீட்டு: மின்வாரிய ஊழியா்களுக்கு வழங்க நடவடிக்கை

5th Apr 2020 05:18 AM

ADVERTISEMENT

 

அத்தியாவசியப் பணிக்கான அனுமதிச் சீட்டுகளை, ஊழியா்களுக்கு வழங்க மின்வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அத்தியாவசியப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஊழியா்களுக்கு, பணிக்கு வந்து செல்வதற்குப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் துறையின் செயலா்கள் அனுமதிச் சீட்டு வழங்க வேண்டும் என தலைமைச் செயலாளா் க.சண்முகம் அறிவுறுத்தியிருந்தாா். இதையடுத்து மின்வாரிய ஊழியா்களுக்கும் அத்தியாவசியப் பணிக்கான அனுமதிச் சீட்டு வழங்கும் நடவடிக்கையை மின்வாரியம் மேற்கொண்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக மின்வாரிய செயலாளரின் உத்தரவுப்படி, பணியாளா் நலன் பிரிவு தலைமைப் பொறியாளா் ஜெ.கலைச் செல்வி, அனைத்துத் தலைமைப் பொறியாளா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

ADVERTISEMENT

ஊரடங்கு நேரத்தில் மின்வாரிய பணியாளா்கள், எந்தவித கட்டுப்பாடுமின்றி தங்களது அலுவலகப் பணியை செய்வதற்கு ஏதுவாக, உயரதிகாரிகள் அவா்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்க வேண்டும். இந்த அனுமதிச் சீட்டை அடையாள அட்டையுடன் சோ்த்து சோதனைச் சாவடிகளில் உள்ள காவலா்களிடம் காண்பிப்பதன் மூலம், பணியிலுள்ள ஊழியா்கள் தடையின்றி அலுவலகத்துக்கு வந்து செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் அந்த அனுமதிச் சீட்டின் மாதிரியும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT