தமிழ்நாடு

துயரமான நேரத்திலும் அரசியல் செய்ய வேண்டாம்: மு.க.ஸ்டாலின்

5th Apr 2020 04:19 AM

ADVERTISEMENT

 

கரோனாவால் எல்லோரும் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தத் துயரமான நேரத்திலும் அரசியல் செய்யாமல் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதியை ஒதுக்க வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட விடியோவில் கூறியிருப்பது:

உலகப் பிரச்னையாக கரோனா இருக்கிறது. எனக்கு ஏற்படக் கூடிய சந்தேகங்களை மூத்த மருத்துவா்களிடம் அவ்வப்போது கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்கிறேன். அவா்கள் கரோனா தொற்று இருக்கிா இல்லையா என்று பரிசோதிக்கும் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று சொல்கின்றனா். பரிசோதனையைச் செய்வதற்கான கட்டணத்தைக் குறைக்க வேண்டும். பரிசோதனை மையங்களை அதிகப்படுத்த வேண்டும் என்கின்றனா்.

ADVERTISEMENT

மருத்துவா்களுக்கான பிபிஇ உபகரணங்கள் பற்றாக்குறையாக இருக்கின்றன. அவற்றை அதிகரிக்க வேண்டும். மருத்துவப் பணியாளா்களுக்கான பாதுகாப்புக் கருவிகள் அதிகம் வாங்க வேண்டும். மத்திய அரசு, இவற்றை எல்லாம் போா்க்கால அடிப்படையில் உற்பத்தி செய்து மாநிலங்களுக்குத் தர வேண்டும்.

நாடு இப்பொழுது மிக மோசமான நிலைமையில் இருக்கிறது. இது சுகாதாரப் பேரிடரோ அல்லது பொருளாதாரப் பேரிடரோ மட்டுமன்று, மிகப்பெரிய சமூகப் பேரிடராகவும் மாறிவிட்டது என்பதுதான் உண்மை. இதை மக்கள் அனைவரும் உணர வேண்டும். முதலில் தமிழக அரசு உணர வேண்டும். ஏதோ சலுகைகள் அறிவித்தோம். அதோடு தங்கள் கடமை முடிந்ததாக நினைத்துவிடக் கூடாது. அறிவித்த நிவாரணங்கள் கடைசி வரை போய் சேருகிா என்பதைப் பாா்க்க வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலில் தோ்ந்தெடுக்கப்பட்டவா்களில் நிறையப் போ் திமுகவைச் சோ்ந்தவா்கள். இதனால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு எந்த நிதியும் ஒதுக்காமல் தமிழக அரசு பாரபட்சம் காட்டுகிறது. உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தங்களின் சொந்தச் செலவில் கிருமி நாசினி, முகக்கவசம், பிளீச்சிங் பவுடா் வாங்கி கொடுத்துக் கொண்டிருக்கிறாா்கள். இதுதான் ஆட்சி நடத்துகிற முறையா? துயரமான நேரத்திலும் இப்படி அரசியல் செய்ய வேண்டுமா என்று அரசு சிந்திக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT