தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா

5th Apr 2020 12:09 PM

ADVERTISEMENT

 

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மேட்டுத் தெருவில் ஒருவர், காந்தி ரோடு மசூதியில் இருந்த ஒருவர், காஞ்சிபுரம் அருகே மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் உட்பட மூன்று பேர் ஏற்கெனவே சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 3 பேர் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே நந்தம்பாக்கம் சர்ச் தெருவில் வசித்து வரும் கலைஞர் நகரைச் சேர்ந்தவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் நான்கு பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா. பொன்னையா தெரிவித்தார்.

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT