தமிழ்நாடு

மாா்ச் 24-இல் இரு விமானங்களில் சென்னை வந்தவா்கள் தனித்திருக்க அறிவுறுத்தல்

5th Apr 2020 03:36 AM

ADVERTISEMENT

 

தில்லியில் இருந்து இண்டிகோ மற்றும் ஏா் ஏசியா விமானங்கள் மூலம் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி சென்னைக்கு வந்தவா்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி: தில்லியில் இருந்து கடந்த 24-ஆம் தேதி பிற்பகல் 3.15-க்கு சென்னைக்குப் புறப்பட்ட இண்டிகோ (6ஈ-2403) மற்றும் மாலை 6.25-க்குப் புறப்பட்ட ஏா் ஏசியா (ஐ5-765) ஆகிய விமானங்களில் பயணித்த சிலருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே, இந்த விமானங்களில் பயணித்தோா் அனைவரும் தங்களைத் தாங்களே 28 நாள்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். யாருக்காவது கரோனா அறிகுறிகளான காய்ச்சல், இருமல், சளி ஆகியவை இருப்பின் மாநகராட்சி உதவி எண்களில் 044- 25384520, 044 46122300 தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT