தமிழ்நாடு

கேரளப் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு

5th Apr 2020 01:13 PM

ADVERTISEMENT


காரைக்கால்:  கேரளப் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்று காரைக்காலுக்கு சனிக்கிழமை திரும்பிய 9 மீனவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

காரைக்கால் மாவட்டம், காரைக்கால்மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தவேல். இவருக்கு சொந்தமான விசைப்படகில், ஆனந்தவேல், வேலவன் மற்றும் தமிழக பகுதியை சேர்ந்த மணிகண்டன், தங்கமணி, மணியன், ராகுல், வெள்ளையதேவன், ரவி, சதீஷ் ஆகிய 9 பேரும் கடந்த மார்ச் 3-ஆம் தேதி காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க கேரளப் பகுதிக்குச் சென்றனர்.

இந்நிலையில்,  கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் 25-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தரை மற்றும் கடல் வழி போக்குவரத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் கேரளப் பகுதிக்கு மீன்பிடித் தொழிலுக்காக சென்ற மீனவர்கள் ஊர் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதற்கிடையே,  தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் தலையிட்டு, மீனவர்கள் ஊர் திரும்ப நடவடிக்கை எடுத்தன. இதையடுத்து காரைக்கால் மற்றும் தமிழக பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்களும் படகில் சனிக்கிழமை காரைக்காலுக்கு வந்தனர்.

ADVERTISEMENT

மீன்பிடித் துறைமுகத்துக்கு வந்த மீனவர்களிடம் மீன்வளத்துறை துணை இயக்குநர் கவியரசன், கடலோர காவல் ஆய்வாளர் பாலமுருகன் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். 

மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில், 9 மீனவர்களும் ஒüவையார் அரசு மகளிர் கல்லுôரி வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு,  சுகாதாரத் துறையினர் கண்காணிப்பில் உள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT