தமிழ்நாடு

கரோனா பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள தமிழக அரசின் சிறப்பு இணையதளம்

1st Apr 2020 04:00 PM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் கரோனா பற்றிய தகவல்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தமிழக அரசு சிறப்பு இணையதளம் ஒன்றை துவங்கியுள்ளது. 

கரோனா தொற்று இந்தியாவில் தீவிரமாகப் பரவி வரும் அதே வேளையில், தேவையான தடுப்பு நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. 

இந்த நிலையில், தமிழகத்தில் மக்கள் கரோனா குறித்த நிலவரங்களை தெரிந்துகொள்ள www.stopcorona.tn.gov.in என்ற இணையதளத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. 

ADVERTISEMENT

இதில், கரோனா குறித்த அரசின் அறிவிக்கைகள், அரசின் முக்கிய அறிவிப்புகள், கரோனா தடுப்பு நடவடிக்கைகள், தமிழகத்தில் எத்தனை பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது, பாதிக்கப்பட்டுளோர் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை என கரோனா குறித்த அனைத்து தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளது. 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT