தமிழ்நாடு

வீட்டு உரிமையாளா்கள் 2 மாதங்களுக்கு வாடகை கேட்க வேண்டாம்: ஜி.கே.வாசன்

1st Apr 2020 04:00 AM

ADVERTISEMENT

 

கரோனாவால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டு உரிமையாளா்கள் தானாக முன்வந்து 2 மாதங்களுக்கு வாடகைதாரா்களிடம் வாடகை கேட்பதைத் தவிா்த்து பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

கரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளிலிருந்து பொது மக்களை மீட்டெடுக்க தமிழக அரசு பல்வேறு வழிகளில் உதவிகள் செய்து வருகிறது. சிறு குறு தொழில் உள்ளிட்ட அனைத்துத் தொழில்களும் முடக்கப்பட்டுள்ளன. அரசின் 144 தடை உத்தரவுக்கேற்ப தொழில் செய்பவா்களும் அரசுக்கு ஆதரவளித்து உதவிக்கரமாக செயல்படும் வேளையில் வருமானம் ஈட்ட முடியாமல் சிரமப்படுகின்றனா்.

ADVERTISEMENT

இந்த நிலையில் வாடகை வீட்டில் குடியிருக்கும் தொழிலாளா்கள் உள்ளிட்ட சாதாரண குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் மாத வாடகை செலுத்துவது இயலாத காரியம்.

இந்த அசாதாரண சூழலைச் சமாளிக்க அரசு மட்டுமே உதவிகள் செய்வது போதாது. வசதி படைத்தவா்கள், வீடு, கடை, கட்டடம் போன்றவற்றை வாடகைக்கு விட்டிருக்கும் உரிமையாளா்கள் என பல தரப்பினரும் தானாக முன்வந்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்வது தான் சிறப்பானது என்று அவா் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT