தமிழ்நாடு

தில்லி மாநாட்டில் பங்கேற்ற கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த 5 பேருக்கு பரிசோதனை

1st Apr 2020 03:27 PM

ADVERTISEMENT

 

தில்லி நிசாமுதீனில் முஸ்லீம் மத வழிபாடு மாநாட்டில் பங்கேற்ற கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த 5 பேரைச் சுகாதாரத் துறையினர் கண்டறிந்துள்ளனர்.

தில்லியில் கடந்த பிப்ரவரி-1முதல் 15ஆம் தேதி வரை நடைபெற்ற முஸ்லீம் மத மாநாட்டில் பங்கேற்ற பலருக்கு கரோனா தொற்று கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை தமிழகத்தில் தில்லி சென்று வந்த 45 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்திலிருந்து தில்லிக்கு 1131 பேரில் 515 பேரே கண்டறியப்பட்ட நிலையில் எஞ்சிய 616 பேரை போலீஸாரும், சுகாதாரத் துறையினரும் செவ்வாய்க்கிழமை முதல் தேடி வந்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் கும்மிடிப்பூண்டி பஜாரை  சேர்ந்த ஒருவர், புதுகும்மிடிப்பூண்டி பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஒருவர், கீழ்முதலம்பேட்டை சேர்ந்த ஒருவர், ஆரம்பாக்கம் பகுதியில் தமிழக ஆந்திர எல்லையை ஒட்டிய பகுதியைச் சேர்ந்த ஒருவர் என 4 பேரை அதிகாரிகள் பிடித்து கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் கும்மிடிப்பூண்டி அடுத்த மெதிப்பாளையம் ஊராட்சி வல்லம்பேடு குப்பம் பகுதியில் மசூதியின் ஹஜ்ரத் தில்லி சென்று வந்த நிலையில் அவரை அப்பகுதி மக்கள் ஊரை விட்டுச் செல்ல கேட்டுக் கொண்டதன் பேரில் அவர் பொன்னேரி பழவேற்காடு பகுதிக்குச்  சென்றுள்ளார். 

அவரையும் அதிகாரிகள் வளைத்துப் பிடித்துக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்த நிலையில் தில்லி சென்று வந்தவர்கள் தாமாகச் சுகாதாரத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், அல்லது இது குறித்து தகவல் தெரிந்தவர் 9600119299, 9444130044 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள கும்மிடிப்பூண்டி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் டாக்டர் கோவிந்தராஜ் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT