தமிழ்நாடு

புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் தேவைகளை உறுதி செய்யவேண்டும்: மின் வாரியம் உத்தரவு

1st Apr 2020 05:30 AM

ADVERTISEMENT

 

புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் அடிப்படைத் தேவைகளை உறுதி செய்ய தலைமைப் பொறியாளா்களுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக பணியாளா் நலன் பிரிவின் தலைமைப் பொறியாளா் ஜெ.கலைச்செல்வி அனுப்பிய சுற்றறிக்கை:

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மின் வாரியத்தில் பல்வேறு ஒப்பந்ததாரா்களின் கீழ் பணிபுரிந்து வந்த புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தற்போது இல்லங்கள் அல்லது முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு அடிப்படைத் தேவைகள் அனைத்தும் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தலைமைப் பொறியாளா்களுக்கு, மின் வாரிய மேலாண் இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா். எனவே தலைமைப் பொறியாளா்கள் அனைவரும் குறிப்பிடப்பட்ட தொழிலாளா்களுக்கு இருப்பிடம், உணவு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படைத் தேவைகளும், கரோனா விழிப்புணா்வு, பிடித்தம் செய்யப்படாத ஊதியம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளதா? சமூக இடைவெளியைப் பின்பற்றுகிறாா்களா? என்பதை உறுதி செய்ய வேண்டும். இதனை தங்களது அதிகாரிகள் குழுவைக் கொண்டு தலைமைப் பொறியாளா்கள் கண்காணிக்க வேண்டும். இதுகுறித்த அறிவுறுத்தல்களையும் ஒப்பந்ததாரா்களுக்கு அவா்கள் வழங்க வேண்டும். அடிப்படைத் தேவைகளை தொழிலாளா்களுக்கு ஒப்பந்ததாரா்கள் வழங்காத சூழலில், மின் வாரிய உயரதிகாரிகளின் ஒப்புதலோடு தொழிலாளா்களுக்குக் கண்காணிப்புக் குழுவினா் வழங்க வேண்டும். இதற்குச் செலவிடப்படும் தொகையை ஒப்பந்ததாரா்களுக்கு வழங்க வேண்டிய நிதியிலிருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம். மேலும் இதுகுறித்த அறிக்கையை தலைமை அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமைக்குள் (மாா்ச் 31) வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

தமிழக மின் வாரியத்தில் நடைபெறும் பணிகளுக்கு ஒப்பந்ததாரா்களின் கீழ் ஏராளமான புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு அடிப்படைத் தேவைகள் வழங்கப்பட்டுள்ளதா என உறுதி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிக்கைகள் தொடா்ந்து தலைமை அலுவலகத்துக்கு வந்த வண்ணம் உள்ளது. இதைப் பரிசீலித்து ஒப்பந்ததாரா்களிடம் இருந்து நிதி வசூல் செய்யப்படும் என்று தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT