தமிழ்நாடு

கரோனா நிவாரண நிதி டோக்கன் வீடுகளுக்கே வந்து வழங்கப்படும்: புதுக்கோட்டை ஆட்சியர்

1st Apr 2020 03:04 PM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கரோனா பாதிப்பு நிவாரண உதவியாக ரூ. 1000 மற்றும் பொருட்கள் பெறுவதற்கான டோக்கன் வீடுகளுக்கே வந்து வழங்கப்படும் என்பதால் பொதுமக்கள் ரேஷன் கடைகளில் குவிய வேண்டியதில்லை என மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தெரிவித்தார்.

அந்த டோக்கனில் தெரிவித்துள்ள நாளில் ரேஷன் கடைகளுக்குச் சென்று சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பொறுமையாக நிவாரண உதவிகளைப் பெற்றுச் செல்லலாம் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

நகரின் பல ரேஷன் கடைகளில் புதன்கிழமை காலை டோக்கன் வாங்க நீண்ட வரிசை காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT