தமிழ்நாடு

காரைக்கால் மருத்துவமனையில் 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் தகவல்

1st Apr 2020 05:58 PM

ADVERTISEMENT

 

காரைக்காலைச் சேர்ந்த 7 பேர் மருத்துவமனையில் கரோனா தொடர்பாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவர்கள் வசித்து வந்த தருமபுரம் பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து போலீஸார் கண்காணிப்பைச் செய்துவருவதாக ஆட்சியர் கூறினார்.

இந்நிலையில் பல்வேறு நாடுகளிலிருந்து காரைக்காலுக்குத் திரும்பிய 292 பேர் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்படுகின்றனர். இவர்களில்  95 பேர் 14 நாள்களுக்குள் உள்ள காலகட்டத்தில் உள்ளதால் நலவழித்துறையினர் தீவிரமான கண்காணிப்பைச் செய்கின்றனர்.

புதுதில்லியில் அண்மையில் நடைபெற்ற  இஸ்லாமிய மாநாட்டிற்காகச் சென்றுவிட்டு காரைக்கால் திரும்பியவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களைத் தனிமைப்படுத்திக் கண்காணிக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.  

ADVERTISEMENT

இது குறித்து மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:

புதுதில்லி  மாநாட்டில் பங்கேற்கச் சென்றுவிட்டு வந்தவர்கள் உள்ளிட்ட 7 பேர் காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கரோனாவுக்கான பரிசோதனை செய்யப்படுகிறது.  7 பேரின் உமிழ்நீர், ரத்தம்  பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவருக்கு கஜானாவுக்கான அறிகுறிகள் தெரியவருவதால், அவர் வசித்து வந்த தருமபுரம் பகுதியை  கரோனா பரவாமல் தடுக்க எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை தொடர்பாக மத்திய அரசு தந்துள்ள வழிகாட்டுதலின் பேரில், அரை கிலோ மீட்டரிலிருந்து ஒரு கிலோ மீட்டர் வரை பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டு, போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்பி மக்களை அச்சத்துக்கு ஆளாக்க வேண்டாம். உறுதிப்படுத்தப்படாமல் எந்த தகவல்களையும் பரப்பக்கூடாது. மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கும் தகவல்களை மக்கள் பின்பற்றவேண்டும். மாவட்ட நிர்வாகத்துக்கு மக்கள் ஒத்துழைப்புத் தரவேண்டும் என்றார் ஆட்சியர்.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT