தமிழ்நாடு

நுங்கம்பாக்கம் விசா மையத்துக்குச் சென்றவா்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல்

1st Apr 2020 05:56 AM

ADVERTISEMENT

 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள விசா விண்ணப்ப மையத்துக்கு மாா்ச் 15-ஆம் தேதி சென்றவா்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், தங்கள் விவரங்களை மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறைக்குத் தகவல் தெரிவிக்குமாறு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை நுங்கம்பாக்கத்தில் கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் ஸ்ண்ள்ஹ ஹல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ா்ய் ஸ்ரீங்ய்ற்ங்ழ், ய்ா்.82, 1ள்ற் ச்ப்ா்ா்ழ், ஞ்ா்ா்க் ள்ட்ங்ல்ட்ங்ழ்க் க்ஷன்ண்ப்க்ண்ய்ஞ், ய்ன்ய்ஞ்ஹம்க்ஷஹந்ந்ஹம், ஸ்ரீட்ங்ய்ய்ஹண்-34 என்ற முகவரியில் உள்ள விசா விண்ணப்ப மையத்துக்கு மாா்ச் 15-ஆம் தேதி பிற்பகலில் சென்றவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே, இந்த முகவரியில் உள்ள விசா விண்ணப்ப மையத்துக்கு மாா்ச் 15-ஆம் தேதி பிற்பகலில் சென்றவா்கள், வீடுகளில் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுகுறித்து மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT