உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை

தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணைக்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பல்கலைக்கழகம் பதிலளிக்க நோட்டீஸ்
உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை

தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணைக்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பல்கலைக்கழகம் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை உயர் நீதிமன்றத்தில் அருண் என்பவர் உள்ளிட்ட பலர் ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த மனுவில், "உதவிப் பேராசிரியர் பதவிக்கான கல்வித்தகுதி குறித்து மீன்வளப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டது. பின்னர், ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. 

இதில், பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன' எனக் குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், இதே விவகாரம் தொடர்பாக ஊழல் எதிர்ப்பு குழுக்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அந்த மனுவில், "உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையில் குறிப்பிட்டுள்ள கல்வித் தகுதி பல்கலைக்கழகம் வரையறுத்துள்ள கல்வித் தகுதியிலிருந்து மாறுபட்டுள்ளது. 

தங்களுக்கு வேண்டியவர்களை உதவிப் பேராசிரியர்களாகத் தேர்வு செய்யும் வகையில் கல்வித் தகுதியை மாற்றி அமைத்துள்ளனர். எனவே இந்த நியமனம் தொடர்பான அறிவிப்பாணைக்குத் தடை விதிக்க வேண்டும்' எனக் கோரியிருந்தனர். 

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என.சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. 

வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த மனுவுக்கு வரும் அக்டோபர் 18-ஆம் தேதிக்குள் மீன்வளப் பல்கலைக்கழகப் பதிவாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com