தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 428 பேர் மீதான வழக்குகளை திரும்ப பெற ஒரு நபர் ஆணையம் பரிந்துரை

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 428 பேர் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு  ஒரு நபர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 428 பேர் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு  ஒரு நபர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொது மக்கள் நடத்தி வந்த போராட்டம் கடந்த ஆண்டு  உச்சகட்டத்தைஅடைந்தது. அதன் தொடர்ச்சியாக மே மாதம் 22-ந் தேதி போராட்டம் தீவிரமடைந்த நிலையில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில், 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகலை ஏற்படுத்தியது. இதையடுத்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு நியமித்து உத்தரவு பிறப்பித்தது.

அவரும் இந்த சம்பவம் குறித்து தொடர்புடைய அதிகாரிகள், துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர், காயம் அடைந்தவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 428 பேர் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு  ஒரு நபர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

"தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 428 பேரின் மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும்; கைது செய்யப்பட்ட நபர்களில் 80 சதவீதம் பேர் 18 வயதிலிருந்து 30 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பதால் அவர்களது எதிர்காலத்தை கருத்தில்கொண்டு நல்லெண்ண அடிப்படையில் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்' என ஆணையத்தின் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com