ஹிந்தியைத் திணித்து ஒரே நாடு என ஏற்படுத்திவிடலாம் என்று மத்திய அரசு முயன்றால் அது தோற்கடிக்கப்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஒன்றில் திங்கள்கிழமை ஆஜரான வைகோ, பின்னர் அளித்த பேட்டி:
ஹிந்தி மொழி ஆதரவு கருத்துக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்திருப்பது பாராட்டுக்குரியது. இந்தியா என்ற நாடு ஒற்றுமையாக இருக்கவேண்டும். அதற்கு தொன்மை வாய்ந்த தமிழ் மொழி, ஆட்சி மொழியாக வேண்டும். எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் ஆட்சி மொழிகளாக ஆக்க வேண்டும்.
ஹிந்தியைத் திணித்து ஒரே நாடு என ஏற்படுத்திவிடலாம் என்று இந்த அரசு முயன்றால் அது தோற்கடிக்கப்படும். ஹிந்தி மொழிக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்ததன் மூலம் தேன்கூட்டில் கை வைத்திருக்கிறார் அமித் ஷா என்றார் அவர்.