தமிழ்நாடு

மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்கக் கோரி தருமபுரம் ஆதீனத்தில் கவிதை வெளியீடு

17th Sep 2019 04:12 AM

ADVERTISEMENT

தருமபுரம் ஆதீனத்தில் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஆறுபாதி கல்யாணம் எழுதிய "மாண்புமிகு மயிலாடுதுறை மாவட்டம், மக்களுக்கு அர்ப்பணிப்போம்' என்ற கவிதையை, தருமை ஆதீனம் குருமகா சந்நிதானம் திங்கள்கிழமை வெளியிட்டார்.
மயிலாடுதுறையை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அறிவிக்க தமிழக அரசை வலியுறுத்தி, மயிலாடுதுறை மாவட்ட அமைப்புக் குழு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அவ்வகையில், தருமபுரம் ஆதீனத்தில், விவசாய சங்கங்களின் கூட்டமைப்புப் பொதுச் செயலாளர் ஆறுபாதி கல்யாணம் எழுதிய "மாண்புமிகு மயிலாடுதுறை மாவட்டம், மக்களுக்கு அர்ப்பணிப்போம்' என்ற கவிதையை தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வெளியிட, மாவட்ட அமைப்புக்குழு முதன்மை ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்வேல் பெற்றுக் கொண்டார்.
இதில், விவசாய சங்கங்களின் கூட்டமைப்புப் பொதுச்செயலாளர் ஆறுபாதி கல்யாணம், மாவட்ட அமைப்புக் குழுவைச் சேர்ந்த வாஞ்சிநாதன், முருகானந்தம், பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT