தமிழ்நாடு

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்க வேண்டும்: டிடிவி. தினகரன்

17th Sep 2019 03:57 AM

ADVERTISEMENT

மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை  ஏற்று மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்க வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் கேட்டுக் கொண்டார்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி.  தினகரன் கூறியது:  பொதுவாக, ஆறுகள் கோடைகாலத்தில் வறண்டு இருக்கும்போதுதான் தூர்வாரப்படும். தற்போது, தண்ணீர் திறந்து விடப்பட்ட பிறகு தூர்வாருவது எதற்காக என்பது உங்களுக்கே தெரியும்.
மயிலாடுதுறையைத் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று அறிவிப்பை வெளியிடலாம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டுப் பயணத்தின் மூலம் அதிகளவில் அந்நிய முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளதாக, அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அதிமுக கூட்டணியில் இருப்பதால் அரசுக்கு ஆதரவான கருத்துகளைத்தான் அவர் கூறுவார் என்றார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT