உலகப் பொதுமொழியாக தமிழைக் கொண்டு வருவதற்கான முயற்சியில் அனைவரும் ஈடுபட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
உலக மக்களோடு உரையாட ஒரு பொதுமொழியை உருவாக்க வேண்டியது அவசியம். உலகப் பொதுமொழிக்காக தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 எம்.பி.க்களும் பிரதமருக்கு அழுத்தம் கொடுத்து
ஐ.நா.சபையில் தீர்மானம் கொண்டு வரச் செய்ய வேண்டும். உலகச் செம்மொழிகளின் வேர்சொற்களின் அடிப்படையில் உலகப் பொதுமொழியை ஐ.நா.சபை உருவாக்கலாம்.
அப்படியில்லாவிட்டால், தொன்மையும், இலக்கிய வளமையும் உள்ள தமிழை உலகப் பொதுமொழியாக ஏற்க ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும். உலகில் இந்தியா உள்ளிட்ட எந்த நாட்டிலும் மொழிச்சிக்கலும் வராது என்று அவர் கூறியுள்ளார்.