திட்டமிட்டு புறக்கணிக்கப்படும் தமிழகம்:  மு.க.ஸ்டாலின்

தமிழகம் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
திட்டமிட்டு புறக்கணிக்கப்படும் தமிழகம்:  மு.க.ஸ்டாலின்

தமிழகம் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

பேரறிஞர் அண்ணாவின் 111-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மதிமுக சார்பில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மதிமுக - திமுக இடையேயான உறவு நெருக்கமாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த மாநாடு எனது மனதுக்கு நெருக்கமானது. ஏனெனில், நானும் வைகோவும் பல பொது மேடைகளில் கலந்து கொண்டிருந்தாலும், மதிமுக கட்சி மாநாட்டில் பங்கேற்பது இதுவே முதல் முறை. எங்கள் உறவு இப்படித்தான். இது பலருக்கு ஆச்சரியமாகவும்,

றாமையாகவும் இருக்கலாம். இதுதான் கருணாநிதி, அண்ணா ஆகியோரின் கனவு. திமுகவிற்கு பக்க பலமாக வைகோ இருந்து வருகிறார்.

திட்டமிட்டு புறக்கணிக்கப்படும் தமிழகம்: ரயில்வே துறையாக இருந்தாலும் சரி, தபால் துறையாக இருந்தாலும் சரி தமிழகம் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறது. தமிழகத்தில் ஒருபுறம் கலாசார தாக்குதலும் மறுபுறம் ரசாயன தாக்குதலும் நடத்தப்படுகிறது. நாட்டின் பொருளாதாரம் நாசம் அடைந்துள்ளது. வேலைவாய்ப்பு மோசமடைந்துள்ளது. 

கொஞ்சம் கண் அசந்தால் இந்தியை திணிக்க முயல்கிறார்கள். இப்போது நீட் நுழைவு தேர்வு மூலம் தமிழக மாணவர்களின் மருத்துவ கனவுகளை மத்திய அரசு சிதைத்துக் கொண்டிருக்கிறது.

நாள்தோறும் போராடி போராடித்தான் நமது உரிமையைப் பெற வேண்டிய சூழல் உருவாகி வருகிறது. 1949-ஆம் ஆண்டிலிருந்தே ஹிந்தியை நாங்கள் எதிர்த்து வருகிறோம். அவர்கள் திணித்துக் கொண்டே இருப்பார்கள், நாம் எதிர்த்துக் கொண்டே இருப்போம்.

போர்வாள் வைகோ:  திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பு காரணமாக உடல்நலம் குன்றி இருந்தபோது, கோபாலபுரம் வந்த வைகோ, திமுக-வுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பதாக வாக்குறுதி அளித்தார். அதன்படி பக்க பலமாக இருந்து வருகிறார். திராவிட இயக்கத்தில் நான் எப்படி நிரந்தர தளபதியோ, அதேபோல் நிரந்தர போர்வாள் வைகோ தான். நீர் அடித்து நீர் விலகாது என்பது போல் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம் என்றும் ஸ்டாலின் பேசினார். 

அப்போது மேடையில் இருந்த வைகோ உணர்வுப்பூர்வமாக கண்கலங்கினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com