சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவப் படிப்புகள்: 2,200 பேர் விண்ணப்பம்

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கு 2,200 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன.  


சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கு 2,200 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன.  
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி (60 இடங்கள்), யுனானி மருத்துவக் கல்லூரி (60 இடங்கள்), திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி (100 இடங்கள்), மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி (50 இடங்கள்) மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி (60 இடங்கள்) என மொத்தம் 5 அரசுக் கல்லூரிகளில் மொத்தம் 330 இடங்கள் உள்ளன. 
இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 280 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளது. இதேபோல் 20 தனியார் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 1,000 இடங்கள் இருக்கின்றன. 
இதை தவிர தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு சுமார் 500 இடங்கள் உள்ளன.
இந்திய மருத்துவ முறை படிப்புகளான சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஓமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப்படிப்புகளுக்கு இந்த ஆண்டு நீட் தேர்வு மதிப்பெண் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 
இந்த படிப்புகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான  விண்ணப்ப விநியோகம் www.tnhealth.org, www.tnmedicalselection.net ஆகிய சுகாதாரத்துறை இணையதளங்களில் ஆகஸ்ட் மாதம் 28-ஆம் தேதி தொடங்கியது. மாணவ, மாணவிகள் ஆர்வமாக விண்ணப்பங்களையும், தகவல் தொகுப்புகளையும் பதிவிறக்கம் செய்தனர். 
விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்வது வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியுடனும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தகுந்த ஆவணங்களுடன் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியுடனும் நிறைவடைந்தது. 
இதுகுறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை அதிகாரிகள் கூறியது, அரசு கல்லூரியில் உள்ள இடங்களுக்கு 1,600 விண்ணப்பங்களும், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 700 விண்ணப்பங்களும் வந்துள்ளன. 
விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியான மாணவ, மாணவிகளுக்கான தரவரிசைப் பட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com