தமிழ்நாடு

இலங்கை பிரதமர் ரணிலுடன் கனிமொழி தலையிலான எம்.பிக்கள் குழு சந்திப்பு 

13th Sep 2019 09:29 PM

ADVERTISEMENT

 

கொழும்பு: இலங்கை பிரதமர் ரணிலுடன் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலையிலான எம்.பிக்கள் குழு சந்தித்து, இந்திய மீனவர்கள் பிரச்சினைகளை எடுத்துரைத்து தீர்வு காண  வலியுறுத்தினர்.

இதுதொடர்பாக திமுக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற குழு துணை தலைவர் கனிமொழி எம்.பி. இலங்கை பிரதமர் திரு ரணில் விக்ரமசிங்கே, இலங்கை மீன்வளத்துறை இணை அமைச்சர் திலிப் வெதாராச்சி ஆகியோரை 12 மற்றும் 13.9.2019 ஆகிய தேதிகளில் சந்தித்துப் பேசினார்.

ADVERTISEMENT

இந்த சந்திப்பின்போது இந்திய மீனவர்களுக்கு எதிராக இலங்கையில் உள்ள கடுமையான தண்டனை விதிக்கும் சட்டம், பறிமுதல் செய்யும் படகுகளை உடனே திரும்ப ஒப்படைக்காமல் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவது, மீன்பிடி வலைகளை அறுத்து நாசப்படுத்துவது, மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி சித்திரவதை செய்து, அடித்து துன்புறுத்தி மனித உரிமைகளை மீறுவது போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்து, இப்பிரச்சினைகளுக்கு  தீர்வு கண்டு இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கான மீன் பிடி தொழில் தங்குதடையின்றி நடக்க உதவிட வேண்டும் என்று இலங்கை பிரதமரிடமும் - மீன்வளத்துறை அமைச்சரிடமும் வலியுறுத்தினார்

 இரு நாட்டு மீனவர்கள் மத்தியில் சுமூக பேச்சுவார்த்தை நடத்தி இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நிரந்தர தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்றும், ஈழத் தமிழர்களின் நலன்களுக்காக அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் தாமதமின்றி நிறைவேற்றிட வேண்டும் என்றும் இலங்கை பிரதமர் திரு ரணில் விக்ரமசிங்கே அவர்களை  கனிமொழி எம்.பி தலைமையிலான குழு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டது.

இந்த சந்திப்பின் போது இலங்கை நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் அமைச்சர் திரு ரவூர் ஹக்கீம் அவர்கள் உடனிருந்தார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT