தமிழ்நாடு

தொலைநிலை படிப்புகளுக்கு செப்.30 வரை விண்ணப்பிக்கலாம்: சென்னைப் பல்கலை. அறிவிப்பு

13th Sep 2019 03:25 AM

ADVERTISEMENT


பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கால அவகாசத்தை நீட்டித்ததைத் தொடர்ந்து, தொலைநிலைப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை வருகிற 30-ஆம் தேதி வரை சென்னைப் பல்கலைக்கழகம் நீட்டித்துள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் 2019 ஆண்டு இளநிலை, முதுநிலை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. விருப்பமுள்ள மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் நேரிலோ அல்லது http://online.ideunom.ac.in என்ற வலைதளம் மூலமாக ஆன்-லைனில் சேர்க்கை பெற முடியும். மேலும் விவரங்களை www.ideunom.ac.in இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT