நவராத்திரியை முன்னிட்டு நவசக்தி ஆலயங்களுக்கு சுற்றுலா

நவராத்திரியை முன்னிட்டு நவசக்தி ஆலயங்களுக்கு, ஒரு நாள் சிறப்பு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


நவராத்திரியை முன்னிட்டு நவசக்தி ஆலயங்களுக்கு, ஒரு நாள் சிறப்பு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் பொது மக்கள் பயன்பெறும் வகையில்  சென்னையில் உள்ள நவசக்தி ஆலயங்களுக்கு, ஒரு நாள் சிறப்பு சுற்றுலா அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 
நவராத்திரி ஒன்பது நாள்கள் மற்றும் விசேஷ நாள்களுக்கும் இந்த சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
சென்னை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைமை அலுவலகத்தில் ( திருவல்லிக்கேணி, டி1 காவல் நிலையம் அருகில்) இருந்து காலை 6 மணிக்கு தொடங்கும் பயணம், மீண்டும் இரவு 7  மணிக்கு  நிறைவடையும். இந்த ஆன்மிக சுற்றுலாவில், காளிகாம்பாள் கோயில் (பிராட்வே), தேவி வடிவுடை அம்மன் கோயில் ( திருவொற்றியூர்)  திருவுடையம்மன்  கோயில் (மேலூர்), ஆனந்த வல்லியம்மன் கோயில் (பஞ்சேஷ்டி), ஆனந்த வல்லியம்மன்  கோயில் (நட்டம்) தேவி செங்கால அம்மன் கோயில் (சொம்புலிவரம்), கொடியிடை அம்மன் மற்றும் வைஷ்ணவ தேவி கோயில் (திருமுல்லைவாயில்), தேவி தையல் நாயகி கோயில் (பூந்தமல்லி), தேவி கருமாரி அம்மன் கோயில் (திருவேற்காடு), காமாட்சி அம்மன்கோயில் (மாங்காடு) அழைத்து 
செல்லப்படுவர். இதற்கான கட்டணமாக ரூ.800  வசூலிக்கப்படுகிறது. இப்பயணத்துக்கு குளிர் சாதனப் பேருந்து இயக்கப்படும். 
மேலும் விவரங்களுக்கு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா வளாகம், எண்.2, வாலாஜா சாலை, சென்னை -2 என்னும் முகவரியில் உள்ள அலுவலகத்தை நேரிலோ, 044-2533 3333, 2533 3444, 2533 3857, 2533 3850-54,  180042531111(கட்டணமில்லா தொலைபேசி எண்) என்னும் தொலைபேசி எண்களையோ தொடர்பு கொள்ளலாம். மேலும் www.ttdconline.com, www.mttdonline.com  ஆகிய இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com