வெள்ளிக்கிழமை 20 செப்டம்பர் 2019

நளினி தனது பரோலை மேலும் நீட்டிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

DIN | Published: 12th September 2019 10:20 AM

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பரோலில் வெளியே உள்ள நளினி தனது பரோலை மேலும் நீட்டிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேர் 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில், வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினிக்கு அவரது மகள் ஹரித்ரா திருமண ஏற்பாடுகள் செய்திட ஒருமாத காலம் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.  

இதைத்தொடர்ந்து, அவர் ஜூலை 25-ஆம் தேதி சிறையில் இருந்து பரோலில் விடுவிக்கப்பட்டார்.  ஆகஸ்ட் 25-ஆம் தேதி மீண்டும் சிறைக்கு திரும்ப வேண்டியிருந்த நிலையில் உயர்நீதிமன்றம் அவருக்கு மேலும் 3 வார காலம் பரோல் நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பரோலில் வெளியே உள்ள நளினி தனது பரோலை மேலும் நீட்டிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : nalini barol high court

More from the section

உழைத்தவனை மேடையேற்றி அழகு பார்க்கும் முதலாளி ரசிகன்தான்: நடிகா் விஜய் உருக்கமான பேச்சு
ஐந்து ஆண்டுகளுக்குள் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா முதலிடம்: இஸ்ரோ விஞ்ஞானி பேச்சு
பால் விற்பனையாளா்களிடம் அதிரடி ஆய்வு: 25 ஊற்றல் அளவீடுகள் பறிமுதல்
வாய்ப்பு... வாய்ப்பு... வாய்ப்பு... ஆவின் பொருட்கள் விற்பனைக்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
கோவை சூலூா் அருகே பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: கல்லூரி இளைஞா் கைது