வெள்ளிக்கிழமை 20 செப்டம்பர் 2019

"கோவில்பட்டி ரயில் நிலையத்தில் அந்தியோதயா விரைவு ரயில் நிற்கும்'

By தூத்துக்குடி| DIN | Published: 12th September 2019 09:34 AM

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் அந்தியோதயா விரைவு ரயில் நின்று செல்லும் என மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே வாரியம் தாம்பரம் - நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில்களுக்கு கோவில்பட்டி ரயில் நிலையத்தில் சோதனை அடிப்படையில் 6 மாதங்கள் நின்று செல்வதற்காக மார்ச் 8 ஆம் தேதி முதல் அனுமதி வழங்கியிருந்தது. சோதனை அடிப்படையில் கோவில்பட்டியில் ரயில்கள் நின்று செல்ல அனுமதிக்கப்பட்ட காலம் முடியும் தருவாயில் உள்ளது. 
இந்நிலையில், மறுஅறிவிப்பு வரும் வரை இந்த ரயில்கள் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
வண்டி எண். 16191 தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா விரைவு ரயில் 10.26 மணிக்கு கோவில்பட்டிக்கு வரும். கோவில்பட்டியில் இருந்து 10.28 மணிக்கு புறப்படும்.
வண்டி எண். 16192 நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் கோவில்பட்டிக்கு 18.10 மணிக்கு வந்து சேரும். கோவில்பட்டியில் இருந்து 18.12 மணிக்கு புறப்படும் என மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : Antyodaya Express

More from the section

ஐந்து ஆண்டுகளுக்குள் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா முதலிடம்: இஸ்ரோ விஞ்ஞானி பேச்சு
பால் விற்பனையாளா்களிடம் அதிரடி ஆய்வு: 25 ஊற்றல் அளவீடுகள் பறிமுதல்
வாய்ப்பு... வாய்ப்பு... வாய்ப்பு... ஆவின் பொருட்கள் விற்பனைக்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
கோவை சூலூா் அருகே பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: கல்லூரி இளைஞா் கைது
ஐ.ஏ.எஸ். தோ்வுக்கு உதவித் தொகையுடன் ஐ.ஏ.எஸ். பயிற்சி