தமிழ்நாடு

7 பேர் விடுதலை: ஆளுநர் முடிவு எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்

10th Sep 2019 01:44 AM

ADVERTISEMENT


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை வைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்யும் உத்தரவை உடனடியாக ஆளுநர் பிறப்பிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் சுட்டுரையில் கூறியிருப்பது:
 பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்து  ஓராண்டு நிறைவடைகிறது. எத்தனை சட்ட வல்லுநர்களிடம் கருத்து கேட்டாலும் கூட, இந்த விஷயத்தில் ஓராண்டுக்குப் பிறகும் முடிவெடுக்காமல் இருப்பது நியாயமல்ல.
 29 ஆண்டுகளாக சிறைகளில் வைக்கப்பட்டிருப்பவர்களை இனியும் சிறைக் கொட்டடியில் அடைத்து வைத்திருப்பது மனித உரிமை மீறல். தமிழக ஆளுநர் மனசாட்சிப்படி செயல்பட வேண்டும். 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கான உத்தரவை ஆளுநர் உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT