தமிழ்நாடு

தலைமை நீதிபதி பணியிட மாற்றம்: மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞர்கள் பணிகள் புறக்கணிப்பு

10th Sep 2019 02:26 AM

ADVERTISEMENT


சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹீல ராமாணீ பணியிட மாற்றம் செய்யப்பட்டத்தைக் கண்டித்து மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை பணிகளை புறக்கணித்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே. தஹில ராமாணீ. இவரை மேகாலய மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாத நியமித்து உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழு (கொலீஜியம்) பரிந்துரைத்தது. 
 அந்த பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு தலைமை நீதிபதி வி.கே. தஹில ராமாணீ, கொலீஜியத்திடம் கோரிக்கை வைத்தார். அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், தலைமை நீதிபதி வி.கே. தஹில ராமாணீ தனது பதவியை ராஜிநாமா செய்தார். இந்நிலையில், தலைமை நீதிபதியின் பணியிட மாற்றத்தை கண்டித்து
மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம், மதுரை வழக்குரைஞர்கள் சங்கம், மதுரை பெண்கள் வழக்குரைஞர்கள் சங்கத்தினர் ஆகியோர் திங்கள்கிழமை தங்களது பணிகளை புறக்கணித்தனர்.
  மேலும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே. தஹில ராமாணீயின் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி செவ்வாய்க்கிழமையும் (செப். 10) பணிகளை புறக்கணிக்க உள்ளதாக மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஏ. நெடுஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT