தமிழ்நாடு

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அதிகாரிகள் கைது செய்யப்படாதது ஏன்?: ப.சிதம்பரம் குடும்பத்தினர் கேள்வி

10th Sep 2019 01:41 AM

ADVERTISEMENT


ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அதிகாரிகள் கைது செய்யப்படாதது ஏன் என்று ப.சிதம்பரத்தின் சார்பில் சுட்டுரையில் அவரது குடும்பத்தினர் திங்கள்கிழமை கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் திஹார் சிறையில் ப.சிதம்பரம் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் திங்கள்கிழமை ப.சிதம்பரம் சார்பில் வெளியிட்டுள்ள சுட்டுரையில் கூறியிருப்பது:
என் சார்பாக குடும்பத்தினரைச் சுட்டுரையில் கீழ்காண்பதைப் பதிவிடக் கூறினேன். ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் 12 அதிகாரிகளுடைய பெயர்கள் குறிப்பிடப்பட்டும், பரிந்துரைக்கப்பட்டும் அவர்கள் கைது செய்யப்படாமல், நீங்கள் மட்டும் ஏன் கைது செய்யப்பட்டீர்கள்? கடைசியாக நீங்கள் கையெழுத்திட்டதால் கைது செய்யப்பட்டீர்களா என்று மக்கள் என்னிடம் கேட்டனர். என்னிடம் பதில் இல்லை. அதிகாரிகள் எவரும் தவறிழைக்கவில்லை. அவர்கள் யாரும் கைது செய்யப்படுவதையும் நான் விரும்பவில்லை என்று அவர் கூறியுள்ளார். 
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிபிஐ விசாரணையில் இருந்தபோது, இந்த வழக்கில், உண்மை ஒரு நாள் வெளிப்படும் என்று ப.சிதம்பரம் குடும்பத்தினர் அறிக்கை விடுவித்தனர். அதைத் தொடர்ந்து திஹார் சிறையில் ப.சிதம்பரம் உள்ளபோது, அவர் சார்பாக குடும்பத்தினர் சுட்டுரையில் இவ்வாறு பதிவிட்டுள்ளனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT