தமிழ்நாடு

சர்ச்சைக்குரிய கேள்வித்தாளை நாங்கள் தயாரிக்கவே இல்லை: கேந்த்ரியா வித்யாலயா நிர்வாகம் விளக்கம்  

7th Sep 2019 09:54 PM

ADVERTISEMENT

 

சென்னை: சர்ச்சைக்குரிய ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாட கேள்வித்தாளை நாங்கள் தயாரிக்கவே இல்லை என்று கேந்த்ரியா வித்யாலயா நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.   

இந்திய அரசமைப்பு சட்டத்தைத் தயாரித்து, நாட்டு மக்களுக்கு வழங்கிய டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரை இழிவு படுத்துகிற வகையிலும், அதேபோல், தலித் என்றால் யார் என்ற கேள்விக்கு 'தீண்டத்தகாதவர்'; என்று பதில் கூறுகிற வகையிலும், அத்துடன் சிறுபான்மை சமுதாய மக்களான முஸ்லிம்களை அவமதிக்கின்ற வகையிலும் கேள்விகள் இடம்பெற்றிருக்கும் ஆறாம் வகுப்பு கேள்வித்தாள் ஒன்று சமூகவலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக உலா வந்தது. அந்த கேள்வித்தாளானது கேந்த்ரியா வித்யாலயா பள்ளியில் உருவாக்கப்பட்டது என்றும் கருத்துக்கள் நிலவி வந்தன.   

இந்நிலையில் சர்ச்சைக்குரிய ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாட கேள்வித்தாளை நாங்கள் தயாரிக்கவே இல்லை என்று கேந்த்ரியா வித்யாலயா நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.   

ADVERTISEMENT

இதுதொடர்பாக சென்னையில் உள்ள கேந்த்ரியா வித்யாலயா நிர்வாகம் சார்ந்து சனிக்கிழமை விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

முஸ்லீம்கள் குறித்தும் பட்டியல் இனத்தவர் குறித்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளி கேள்வித்தாளில் தவறாக சித்தரித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி உண்மையில்லை.

சர்ச்சைக்குரிய கேள்வித்தாளை நாங்கள் தயாரிக்கவே இல்லை.

எனவே சமூக வலைத்தளவாசிகள் போலியான கேள்வித்தாளை பரப்ப வேண்டாமென கேட்டுக்கொள்கிறோம்

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : kendriya vidyalaya degrades ambedkar 6th std question paper social science lesson controversy cleared KV management சர்ச்சைக்குரிய கேள்வித்தாள் ஆறாம் வகுப்பு அம்பேத்கர் இஸ்லாமியர்கள் கேந்த்ரியா வித்யாலயா விளக்கம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT