தமிழ்நாடு

தமிழகத்தில் தொழில் தொடங்க  அமெரிக்கர்கள் விருப்பம்

7th Sep 2019 01:50 AM

ADVERTISEMENT


தமிழகத்தில் தொழில் தொடங்க அமெரிக்காவின் சான்ஃபிரான்சிஸ்கோ நகர தொழிலதிபர்கள் விருப்பம் ரிவித்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. 
அமெரிக்காவின் சான்ஃபிரான்சிஸ்கோ நகரில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது ப்ளூம் எனர்ஜி உள்பட பல்வேறு நிறுவனங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், பல்வேறு தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசினர். பாயிண்ட் கார்டு வென்சூர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கிர்ஷ் பாணு, ஜோகோ நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ஸ்ரீதர் வேம்பு, நியோ நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் கணேஷ் வி.அய்யர், அமெரிக்கன் சைபர் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராஜ் சர்தானா, பாஸ்கான் மோட்டார் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் அருண் ஸ்ரீலம், அல்டிஸ் கேபிடல் இங்க் நிறுவனத்தைச் சேர்ந்த பாலாஜி பக்தவத்சலம், க்ளாரி நிறுவனத்தின் முதன்மை அலுவலர் வெங்கட் ரங்கன், எவர் போர்ஸ்.காம் நிறுவனத்தின் நிறுவனர் ஈஸ்வரன் ராமலிங்கம், கோபாலகிருஷ்ணன் உள்பட தொழில் துறையைச் சேர்ந்த பலரும் தமிழகத்தில் தொழில் தொடங்குவது தொடர்பாக தங்களது விருப்பத்தைத் தெரிவித்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT