தமிழ்நாடு

சிறையில் ப.சிதம்பரம்: காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

7th Sep 2019 02:24 AM

ADVERTISEMENT


ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் திகார் சிறையில் ப.சிதம்பரம் வைக்கப்பட்
டுள்ளதைக் கண்டித்து காங்கிரஸார் வெள்ளிக்கிழமை சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸார் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்திருந்தார்.
அதன்படி, தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவனில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் தலைமையில் காங்கிரஸார் திரண்டனர்.
இதனால், சத்தியமூர்த்திபவன் வாயில் பகுதியில் ஏராளமான போலீஸார் குவிந்திருந்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் ஊர்வலமாக புறப்பட்டுச் சென்றபோது போலீஸார் அவர்களை கைது செய்து காவல்துறை வேனில் அழைத்துச் சென்று பின்னர் விடுவித்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT