தமிழ்நாடு

ஒரே நாடு- ஒரே குடும்ப அட்டை திட்டத்தில்  திமுக இரட்டை வேடம்: டிடிவி தினகரன்

7th Sep 2019 02:02 AM

ADVERTISEMENT


ஒரே நாடு-ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலர்  டிடிவி தினகரன் கூறினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியது:
ஒரே நாடு-ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் புரிதலோடு செயல்பட வேண்டும். பொது விநியோகத் திட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்கள் விநியோகத்தில் எந்தவொரு பாதிப்பும் வரக்கூடாது.  
ஒரே நாடு-ஒரே குடும்ப அட்டை திட்டத்தை அறிவித்தது காங்கிரஸ் அரசு தான். அப்போது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில் திமுக இடம்பெற்றிருந்தது. ஆனால், திமுக இரட்டை வேடம் போடுகிறது. இந்த திட்டத்தில் தமிழக மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
அடுத்த 25 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சி என்பது அக்கட்சியினரின் ஆசையாக இருக்கலாம். யார் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை, சட்டரீதியாக வெளியே கொண்டுவர நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். 
தமிழக முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் முதலீடுகள் ஈர்க்கப்பட வேண்டும் என்பது தான் எங்களது விருப்பம். 
ஆனால், எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குச் சென்றார் என்ற நிலை வந்துவிடக் கூடாது. சென்னை பல்கலைக்கழகத்தில் சேர்க்கை மறுக்கப்பட்ட மாணவரை,  மீண்டும் சேர்ப்பது குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்  என்றார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT