தமிழ்நாடு

உயர்நீதிமன்றத்தில் நீதிபதியின் மடிக்கணினி திருட்டு

7th Sep 2019 02:29 AM

ADVERTISEMENT


சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியின் மடிக்கணினி திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் நீதிமன்ற தலைமை நீதித்துறை நடுவராக இருப்பவர் ஸ்ரீஜா. இவர் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தனது காரில் வியாழக்கிழமை வந்தார். காரை செம்பரம்பாக்கம் காமராஜர் தெருவைச் சேர்ந்த சொ.மன்மதன் (42) ஓட்டி வந்தார். காரை உயர்நீதிமன்ற வளாகத்தில் நிறுத்திவிட்டு ஸ்ரீஜா, தனது வேலைகளை கவனிக்க உயர்நீதிமன்றத்துக்குள் சென்றார். அதேபோல மன்மதன், காரை அங்கு விட்டுவிட்டு, டீ குடிக்கச் சென்றார். சிறிது நேரத்துக்கு பின்னர் ஸ்ரீஜா காருக்கு திரும்பி வந்தபோது  காரின் பின் இருக்கையில் ஒரு பையில், அவர் வைத்துச் சென்ற மடிக்கணினி திருடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து ஸ்ரீஜாவின் கார் ஓட்டுநர் மன்மதன் உயர்நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.
மத்திய தொழில் பாதுகாப்புப் படை,சென்னை போலீஸார் ஆகியோரின் கடுமையான பாதுகாப்பையும் மீறி நீதிபதியின் மடிக்கணினி திருடப்பட்டிருப்பது காவல்துறை அதிகாரிகளிடமும்,வழக்குரைஞர்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT