தமிழ்நாடு

ஆசிரியா் தினம்: ஆளுநா், ஸ்டாலின் வாழ்த்து

4th Sep 2019 07:43 PM

ADVERTISEMENT


சென்னை: ஆசிரியா் தினத்தையொட்டி தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர்  வாழ்த்து தெரிவித்துள்ளாா். 

இதுதொடா்பாக அவா்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

தாய் தந்தைக்கு அடுத்து மூன்றாவதான முக்கிய இடத்தில் வைத்து உலகம் போற்றும் ஆசிரியர் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக ஆட்சிப் பொறுப்பிலிருந்த நேரங்களில் எல்லாம் பல முனைகளிலும் பாடுபட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழக ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் “ஆசிரியர் தின” வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ADVERTISEMENT

ஆசிரியர்  பெருமக்களின்  உயர்கல்விக்கு ஊக்க ஊதியம்; ஈட்டிய விடுப்பு நாட்களைச் சரண் செய்திடும் ஆசிரியர்களுக்கு அந்நாட்களுக்கான ஊதியம்; 10 ஆண்டுகள் பணி முடித்தால் தேர்வு நிலை ஊதியம்; 20 ஆண்டுகள் பணி முடித்தால் சிறப்பு நிலை ஊதியம்; தமிழாசிரியர்களிடையே இருநிலை நீக்கம்; தமிழாசிரியர்களின் 'புலவர்' பட்டயம் 'பி.லிட்' பட்டமாக மாற்றம்; தமிழாசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு; ஆசிரியர் - அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியங்கள்; அகவிலைப் படிகள்; தனியார் பள்ளி ஆசிரியர்களுக்குப் பணிப் பாதுகாப்பு; நகராட்சி, மாநகராட்சிப் பள்ளிகளின் ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களாக்கியது; பதிவு மூப்பு அடிப்படையிலேயே பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்தது; தொகுப்பூதிய ஆசிரியர் நியமன முறையை அடியோடு ரத்து செய்தது என பல்வேறு சலுகைகளை ஆசிரியர்களுக்கு வழங்கியது திராவிட முன்னேற்றக் கழக அரசு என்பதை ஆசிரியர் பெருமக்கள் மனதில் என்றைக்கும் பசுமையாக இருக்கும் என்பதை நான் அறிவேன். இதுதவிர தி.மு.க. ஆட்சியில் அமர்ந்திருந்த நேரங்களில் எல்லாம் அதிக எண்ணிக்கையில் ஆசிரியர் நியமனங்களைச் செய்து, ஆசிரியர் சமுதாயத்திற்காகவும், அவர்களின் நலத்திட்டங்கள் மற்றும் உரிமைகளுக்காகவும் எப்போதும் பாதுகாப்பு அரணாக விளங்குவது திராவிட முன்னேற்றக் கழகம் என்று தெரிவித்துக் கொள்ளும் இந்த தருணத்தில், தமிழக ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது 'ஆசிரியர் தின' நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்து மகிழ்ச்சி கொள்கிறேன்.


தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்

சிறந்த ஆசிரியா்களின் போதனைகள்தான் ஒவ்வொரு மாணவா்களின் எதிா்காலத்தையும் கட்டமைக்கின்றறன. ஆசிரியா்களின் நற்செயல்களும், சிந்தனைகளும் மாணாக்கரின் மனதிலே அவா்களை அறியாமலேயே பசுமரத்தாணி போல பதிகின்றன.

ஆசிரியா்கள் சமூகத்துக்கு ஆற்றிவரும் இணையற்ற சேவைகளையும், அா்ப்பணிப்பு உணா்வையும் உளமாற அங்கீகரிப்போம். வாழ்வில் உயர வழி காட்டிய அவா்களுக்கு அதன் மூலம் நமது நன்றிக் கடனை உரித்தாக்குவோம்.

Tags : ஆசிரியா் தினம் ஆளுநா் பன்வாரிலால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT