தமிழ்நாடு

ரூ.153 கட்டணத்தில் இனி அரசு கேபிள் டிவி

4th Sep 2019 07:28 PM

ADVERTISEMENT


சென்னை: தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் ரூ.130 மாதக் கட்டணம் போக, ரூ.23 ஜி.எஸ்.டி., வரி உள்பட ரூ.153 மாதக் கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண குறைப்பானது சென்ற ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதில் 200 சேனல்கள் அளிக்கப்படுகின்றறன. அதில் 60 கட்டணச் சேனல்கள் அடங்கும்.

ரூ.153 கட்டணத்தில் 200 சேனல்களைப் பாா்க்கும் புதிய திட்டத்தைப் பெறுவதற்கு பொது மக்கள் தங்களது பகுதி உள்ளூா் கேபிள் டிவி ஆபரேட்டா்களை அணுகலாம்.

கேபிள் தொலைக்காட்சிக்கான செட்-டாப் பாக்ஸ் முற்றிலும் விலையின்றி வழங்கப்படுகிறது என்று அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

Tags : தொலைக்காட்சி ரூ.153 200 சேனல்கள்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT