தமிழ்நாடு

வேளாண் கல்லூரி கட்டுமானம் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் 8 பேர் காயம்

4th Sep 2019 01:59 AM

ADVERTISEMENT


குடுமியான்மலை அரசு வேளாண்மை கல்லூரியில் கூடுதல் வகுப்பறை கட்டுமான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்போது திங்கள்கிழமை இரவு சாரத்துடன் கான்கிரீட் உடைந்து கீழே விழுந்த விபத்தில் 8 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். 
புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை அண்ணா பண்ணை அருகே அரசு வேளாண்மை கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில் கூடுதல் வகுப்பறை கட்டுமான பணி தற்போது நடைபெற்று வருகிறது. புதிய கட்டடத்திற்கான கான்கிரீட் அமைக்கும் பணியில் திங்கள்கிழமை இரவு தொழிலாளிகள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக சாரத்துடன் கான்கிரீட் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய கட்டுமான தொழிலாளர்கள் பாண்டி, நல்லுசாமி, பாலசுப்பிரமணியன், முத்துசாமி உள்ளிட்ட 8 பேர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்தவர்களை சக ஊழியர்கள் மீட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அரசு வேளாண்மை கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகளின் கட்டுமான பணியின்போது தரமற்ற முறையில் பணிகள் நடைபெறுவதால்தான் இந்த விபத்து நிகழ்ந்ததாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர். மேலும், பணியின் தரத்தை தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.



 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT