தமிழ்நாடு

ராமதாஸுடன் குமரிஅனந்தன் சந்திப்பு

4th Sep 2019 01:41 AM

ADVERTISEMENT


பாமக நிறுவனர் டாக்டர் ச. ராமதாஸை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் சென்னையில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். 
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி செப்டம்பர் 15-ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் குமரி அனந்தன் உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளார். ராமதாஸை செவ்வாய்க்கிழமை சந்தித்த அவர், உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்று வாழ்த்துக் கூற வருமாறு அழைப்புக் கொடுத்தார். அவரது அழைப்பை ஏற்றுள்ள ராமதாஸ்,  அந்தப் போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றுவதாக தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT