தமிழ்நாடு

முட்டை விலையில் மாற்றம் இல்லை

4th Sep 2019 01:58 AM

ADVERTISEMENT


நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றம் இன்றி ரூ.3.44-ஆக நீடிக்கிறது.
பிற மண்டலங்களின் விலை உயர்வு, சரிவை சுட்டிக்காட்டி, நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு, தினம்தோறும் முட்டைக்கான பண்ணைக் கொள்முதல் விலை அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில்,  நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை அதன் தலைவர் மருத்துவர் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவதால், முட்டை விற்பனை சரிவடைந்துள்ளது. 
எனவே, புதன்கிழமைக்கான முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்ய வேண்டாம் என்று குழுவின் உறுப்பினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  இதைத் தொடர்ந்து, முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை மாற்றமின்றி ரூ.3.44-ஆக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.
பிற மண்டலங்களில் முட்டை விலை விவரம்(காசுகளில்): ஹைதராபாத்-315, விஜயவாடா-342,  ஹோஸ்பெட்-305,  சென்னை-365, மும்பை-388, பெங்களூரு-340, கொல்கத்தா-389, தில்லி-340.
இதேபோல், பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், கறிக்கோழி கிலோ ரூ.67-ஆக நிர்ணயிக்கப்பட்டது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT