தமிழ்நாடு

மத்திய  தீர்ப்பாய உறுப்பினர்கள்  வழக்குரைஞர் உடை அணிய தடை கோரி வழக்கு

4th Sep 2019 02:34 AM

ADVERTISEMENT

மத்திய நிர்வாக  தீர்ப்பாயங்களில் உள்ள நிர்வாக உறுப்பினர்கள், வழக்குரைஞர்களுக்கான உடையை அணிய தடை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. 
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் கனகசபாபதி தாக்கல் செய்த மனுவில், மத்திய அரசுப் பணியாளர்களின் பணி தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிக்க மத்திய நிர்வாக தீர்ப்பாயம் கடந்த 1985-ஆம் ஆண்டு அமைத்தது. 
இந்த தீர்ப்பாயங்களில் ஓய்வு பெற்ற நீதிபதியை துணைத் தலைவராக நியமித்து அனைத்து மாநிலங்களிலும் இந்த நிர்வாகத் தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டன. இந்த தீர்ப்பாயங்களில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ்., ஐபிஎஸ்., அதிகாரிகள் நிர்வாக  உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள். இந்த நிர்வாக உறுப்பினர்கள் பெரும்பாலும் சட்டம் பயிலாதவர்கள். எனவே தீர்ப்பாயங்களில் உள்ள நிர்வாக உறுப்பினர்கள் வழக்குரைஞர்களின் உடையை அணிய தடை விதிக்க வேண்டும். அவர்கள் வேறு ஆடைகளை அணிய உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். 
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக மத்திய அரசு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT