தமிழ்நாடு

புதுச்சேரி துணை சபாநாயகராக பாலன் போட்டியின்றி தேர்வு

4th Sep 2019 01:39 PM

ADVERTISEMENT

புதுச்சேரி துணை சபாநாயகர் பதவிக்கு ஆளும் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் பாலன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

புதுவை சட்டப்பேரவைத் தலைவராக இருந்த வெ.வைத்திலிங்கம் கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு மக்களவைத் தொகுதி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, புதுவை பேரவைத் தலைவராக துணைத் தலைவர் பதவி வகித்து வந்த வே.பொ. சிவக்கொழுந்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

அதன் காரணமாக, பேரவை துணைத் தலைவர் பதவி காலியானது. இந்நிலையில் புதுச்சேரி துணை சபாநாயகர் பதவிக்கு ஆளும் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் பாலன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். எதிர்க்கட்சி சார்பில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், பாலன் போட்டியின்றி துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  

இதையடுத்து அவருக்கு முதல்வர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். 
 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT