தமிழ்நாடு

புதுகை மீனவர்கள் 8 பேர் இலங்கையில் விடுதலை

4th Sep 2019 01:57 AM

ADVERTISEMENT


எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையால் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட, புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 8 பேர் செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த மாதம் 19ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற, ஜெயக்குமார் மகன் மணிகண்டன்(31), சுந்தரம் மகன் பாலகிருஷ்ணன்(47), கருப்பையா மகன் கார்த்தி(22), முனியசாமி மகன் சதீஷ் (21) மற்றும் செம்புமகாதேவி பட்டிணம் கிராமத்திலிருந்து கடந்த மாதம் 20ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற, தொண்டிமுத்து மகன் தொண்டீஸ்வரன்(25), தூண்டி மகன் முத்துமாரி(30), லெட்சுமணன் மகன் தனிக்கொடி(35), காத்தமுத்து மகன் ராமலிங்கம் (42) ஆகிய 8 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து  யாழ்பானம் சிறையில் அடைத்து வைத்திருந்தனர்.
இந்நிலையில் ஊர்காவல்துறை  நீதிமன்ற நீதிபதி யூட்சன் முன்னிலையில் மீனவர்கள் வழக்கு செவ்வாய்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, எதிர்காலங்களில் இலங்கை கடல் எல்லைக்குள் வரக் கூடாது என்ற நிபந்தனையுடன் மீனவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், விசைப்படகுக்கான உரிய ஆவணங்களுடன், வரும் நவம்பர் 1-ஆம் தேதி படகின் உரிமையாளர் ஆஜராக வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில், படகு இலங்கை அரசுடமையாக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT