தமிழ்நாடு

பாலியல் வன்கொடுமை வழக்கு: ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி

4th Sep 2019 02:21 AM

ADVERTISEMENT


பொள்ளாச்சியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய  கும்பலைச் சேர்ந்த 3 பேர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பொள்ளாச்சியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை மிரட்டி பலர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இதைத் தொடர்ந்து அந்த சிறுமி, பொள்ளாச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் வாக்குமூலம் அளித்தார். அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அருண் என்பவர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் அருண் உள்பட 3 பேர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 
இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு குற்றவியல் வழக்குரைஞர் பிரபாவதி, மனுதாரர்கள் சிறுமியை மிரட்டி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால், அது வழக்கு விசாரணையைப் பாதிக்கும். எனவே குற்றம்சாட்டப்பட்ட அவர்களின் செயலை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது எனக்கூறி வாதிட்டார். அரசுத் தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி  ஜாமீன் கோரி தாக்கல் செய்த மூவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT