தமிழ்நாடு

நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் 

4th Sep 2019 01:04 PM

ADVERTISEMENT

நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய வெளியிட்ட அறிக்கையில்,
மேலடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

குறிப்பாக நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புண்டு. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்; மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்யலாம்.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 7 செ.மீ., மழைப்பதிவாகி உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

Tags : Rain
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT