தமிழ்நாடு

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக ஏ.கே.மிட்டலை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை

4th Sep 2019 02:28 PM

ADVERTISEMENT

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக மேகாலயா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்தவர் வி.கே.தஹில ராமாணீ. இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். மத்திய தீர்ப்பாயம் தொடர்பான வழக்குகள் மற்றும் குற்றவியல் வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்துள்ளார்.  

இந்த நிலையில், தலைமை நீதிபதி வி.கே.தஹில ராமாணீயை மேகாலயா மாநிலத்தின் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட 3 நீதிபதிகள் குழு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியானது. 

அதன்படி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில ராமாணீயை மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற கொலீஜியம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து  சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக மேகாலயா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT