தமிழ்நாடு

சுங்கச் சாவடியின் கட்டண உயர்வு: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

4th Sep 2019 01:30 PM

ADVERTISEMENT

சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளில் எந்தவிதமான அறிவிப்புமின்றி திடீரென கட்டணங்களை உயர்த்தி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இத்தகைய அறிவிப்பினால் ஒவ்வொரு சுங்கச் சாவடிகளிலும் இனி ரூ.15 கூடுதலாக செலுத்த வேண்டும். ஏற்கனவே சுங்கச் சாவடிகளின் கட்டண கொள்ளையால் சொந்தமாக வாகனம் வைத்துள்ளோர் மற்றும் வாடகை வண்டிகளில் பயணிப்போர், சரக்குகளை கையாளும் வணிகர்கள் என அனைவரும் பெரும் பாதிப்பில் உள்ளனர். 
சுங்கச் சாவடிகளில் கட்டணங்களை குறைக்க வேண்டும் என்ற அவர்களின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ள சூழலில் தற்போது கூடுதல் கட்டணம் என்பது கண்டனத்திற்குரியது. அதை உடனடியாக ரத்து செய்வது தான் நியாயமானது. மக்கள் நலன் கருதி தேசிய நெடுஞ்சாலைத்துறை கட்டண உயர்வை கைவிட மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT