தமிழ்நாடு

காவிரி மீட்பு பிரசார பயணம்: ஜக்கி வாசுதேவுக்கு கமல் ஆதரவு

4th Sep 2019 01:41 AM

ADVERTISEMENT


காவிரி மீட்புக்காக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் மேற்கொள்ளும் மோட்டார் சைக்கிள் பிரசாரப் பயணத்துக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆதரவும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
 காவிரி கூக்குரல் என்ற பெயரில் காவிரியை மீட்பதற்காக கர்நாடக மாநிலம் தலைக்காவிரியில் இருந்து திருவாரூர் வரை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் மோட்டார் சைக்களில் பிரசாரப் பயணம் மேற்கொள்ள உள்ளார். செப்டம்பர் 3-ஆம் தேதி தொடங்கி 15-ஆம் தேதி வரை இந்தப் பயணத்தை அவர் மேற்கொள்கிறார். இதுகுறித்து  கமல் சுட்டுரையில் கூறியிருப்பது:
காவிரி மீட்புக்காக ஜக்கி வாசுதேவ் மேற்கொள்ளும் பிரசாரப் பயணத்தை மதம், அரசியல், கொள்கைகளைக் கடந்து அனைவரும் ஆதரிக்க வேண்டும். நம்முடைய உலகைப் பாதுகாப்பதற்கான முயற்சி இது. ஜக்கி வாசுதேவுக்கு வாழ்த்துகள். இந்தப் பயணம் எல் லா வகையிலும் வெற்றியடையட்டும் என்று அவர் கூறியுள்ளார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT